தமிழ்நாட்டில் காலநிலை மெதுவாக மாறி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் குளிர் இருந்தாலும், பிற்பகலில் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து கட்டி தான் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இன்றும் (பிப்.,24) வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நாளை (பிப்.,25) முதல் மார்ச் 1ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.