நீலகிரி கூடலுார் பகுதியை சேர்ந்த சதீஷ் - ஷாலினி தம்பதியின் குழந்தைகள் நிதிஷ் (5) பிரனிதா (3). சதீஷ், நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார். நேற்று (பிப். 23) காலை, ஷாலினி தன் இரண்டு குழந்தைகளுடன் விவசாய நிலத்துக்கு சென்ற நிலையில் இருவரும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது சமீபத்தில் தோண்டப்பட்ட நீர் குட்டையில், குழந்தைகள் விழுந்து உயிரிழந்தனர். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.