திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று வெள்ளிக்கிழமை மாலை கேரளா அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அதிகமான பயணிகளும் இருந்தனர். மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வரும்போது பிரேக் செயல் இழந்து மேம்பாலத்தின் சுவரில் பஸ் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பஸ் கீழே கவிழ்ந்திருந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில் போலீசார் வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு பழுதுபட்ட பஸ்சை டிப்போவிற்கு கொண்டு சென்றனர்.