புதுக்கடை: அங்கன்வாடி மைய பிரச்சனை - பொதுமக்கள் போராட்டம்

83பார்த்தது
புதுக்கடை அருகேயுள்ள தும்பாலி பொற்றவிளை பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ரூ. 14 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் அமைக்கப்பட்டது. இந்த கட்டிடம் கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி திறக்கப்பட்டது. அதன் பிறகு சிலரின் தூண்டுதலால் அங்கன்வாடி ஆசிரியையும், உதவியாளரையும் புதிய கட்டிடத்தில் வரவிடாமல் தடுத்தனர். அரசால் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அரசால் கட்டிய புதிய அங்கன்வாடி கட்டிடத்தில் மையம் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடத்தில் மையம் நடந்து வருகிறது. 

இதற்கிடையில் அரசு கட்டிய புதிய கட்டிடத்தில் மையத்தை மாற்றக் கூடாது எனவும், பழைய இடத்திலேயே மையம் செயல்பட வேண்டும் எனவும் அப்பகுதியினர் அங்கு பழைய மையத்தில் குவிந்து நேற்று போராட்டம் நடத்தினர். தொடர்ந்து விளவங்கோடு தாசில்தார் ஜூலியன், முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலுவலர் அஜிதா, குழந்தைகள் நல திட்ட அலுவலர் ஜெயந்தி ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவதாக கூறி, அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி