தேங்காபட்டணம்: பைக்கை உடைத்து பணம் திருட்டு.. போலீசில் புகார்

56பார்த்தது
தேங்காபட்டணம்: பைக்கை உடைத்து பணம் திருட்டு.. போலீசில் புகார்
தேங்காப்பட்டணம் அருகே முள்ளூர் துறை பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (57). மீனவர். இவர் நேற்று தனது பைக்கில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க சென்றார். அங்கு துறைமுக அலுவலர் அலுவலகம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, யாரோ மர்ம நபர்கள் ஸ்கூட்டரின் இருக்கையை உடைத்து பைக் உள்ளே இருந்த ரூ. 9 ஆயிரத்து 500-ஐ திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அலெக்சாண்டர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி