கிள்ளியூர் - Killiyur

கருங்கல்: ஓடும் பஸ்ஸில் குழந்தையின் நகை திருட்டு

கருங்கல்: ஓடும் பஸ்ஸில் குழந்தையின் நகை திருட்டு

கருங்கல் அருகே செம்முதல் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (37). கொத்தனார். இவரது மனைவி சரண்யா (30). சரண்யா தனது குழந்தையுடன் வில்லுக்குறி அருகே உள்ள தனது தாயார் வீட்டுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சென்றிருந்தார். பின்னர் நேற்று பிற்பகல் தாயார் மற்றும் தங்கையுடன் கணவரின் வீட்டிற்கு அரசு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தார். கருங்கல் பஸ் நிலையம் வரும்போது அவரது ஒன்றரை வயது குழந்தை கழுத்தில் கிடந்த இரண்டு பவுன் செயினை காணவில்லை. உடனடியாக சரண்யா பஸ்ஸிலிருந்து சத்தம் போட்டார். சக பயணிகள் பார்த்தபோது பஸ்ஸில் சந்தேகப்படும் வகையில் இருந்த இரண்டு பெண்கள் கூட்டத்தில் தப்பி சென்றுள்ளனர். இது குறித்து சரண்யாவின் கணவர் ஐயப்பன் புகாரின் பேரில் கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా