நடைக்காவு:   சாத்தங்கோடு அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

50பார்த்தது
நடைக்காவு அருகே சாத்தன் கோடு அரசு நடுநிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஏஞ்சல் ஷைனி முன்னிலையில் நடைபெற்றது. 

முன்னதாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை மாணவர்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐந்து குழுக்களாக பிரித்து மகிழ் முற்றம் என்ற தலைப்பில் பல வண்ணக் கோலங்கள் போட்டனர். அதைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே கயிறு இழுத்தல், உறியடி, கபடி போன்ற நாட்டுப்புற போட்டிகள் நடத்தப்பட்டு சுழற் கோப்பைகள் வழங்கப்பட்டன. 

மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் கரும்பு துண்டுகள் வழங்கி இனிதாக நிறைவடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமையாசிரியர் பால் விக்டர், பட்டதாரி ஆசிரியர் ஜார்ஜ், ஆசிரியர்கள் ராஜம், பத்மஜா, லலிதா, உஷாராணி, அஜிதா, ஆஷா, சரசம் போன்றவர்கள் செய்தனர்.

தொடர்புடைய செய்தி