வறுமையின் பிடியில் சிக்கித்தவித்த எனது தாயாரிடம் கரண்ட் பில் கட்டுவதற்குக் கூட பணமில்லாமல் இருந்ததாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், "மின் கட்டணம் செலுத்த கூட பணம் இல்லாமல் நகைகளை அடகுவைத்து காதில் துடைப்ப குச்சியுடன் என் தாய் இறந்தார். இதன் தாக்கத்தால் விவசாயிகள் இலவச மின்சாரத்தை பயன்படுத்தும் திட்டத்தை கொண்டு வந்தேன்" என்றார்.