கர்நாடகா: பெங்களூருவில் மென்பொருள் பொறியாளர் அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயங்க் ரஜனி (30) ஆரம்பித்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான மயங்க் தனது பெண் தோழியுடன் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது பால்கனியில் இருந்து குதித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த மயங்க் மூளைச் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.