இரவு தூங்க சென்ற தம்பதி காலையில் சடலமாக மீட்பு

62பார்த்தது
இரவு தூங்க சென்ற தம்பதி காலையில் சடலமாக மீட்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேர்ப்பாக்கம் கிராமத்தில் கூலி வேலை செய்து வருபவர்கள் ராஜாராம் (58) - சாமுண்டீஸ்வரி (49) தம்பதி. இவர்கள், நேற்று முன்தினம் (மார்ச் 5) இரவு தூங்கச் சென்றனர். காலையில் இருவரும் வீட்டை விட்டு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், வீட்டின் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி