புனே - ஹாதியா ரயிலில் பயணித்த பயணி ஒருவர் இணையதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தான் தூங்கிக்கொண்டிருந்தபோது ஒரு ஆண் தனக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தாக குறிப்பிட்டுள்ளார். எதற்காக? என கேட்டதற்கு, “நான் முத்தம் கொடுக்க விரும்பியதால் கொடுத்தேன்' என கூறியுள்ளார். இவற்றைப் பார்த்த அந்நபரின் மனைவி, கணவரை பாதுகாத்ததோடு, முத்தம் கொடுத்த நபரை அங்கிருந்து செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.