ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் Viacom18 மற்றும் The Walt Disney ஆகிய நிறுவனங்கள் Jiostar என்ற பெயரில் ஒன்றாக இணைந்தன. இதனால், அந்நிறுவனத்தில் தேவையற்ற பதவிகள் இருப்பதாகவும், அதன் காரணமாக 1,100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில், அந்நிறுவனத்தின் மூத்த மேலாளர்கள் முக்கிய இயக்குநர்கள் அடங்குவர். பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு 6-12 மாத சம்பளத்தை ஊதிய நிவாரணமாக வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.