நித்திரவிளை: தேமுதிக பிரமுகர் மீது தாக்குதல்
நித்திரவிளை அருகே காஞ்சிரம்நின்ற விளையை சேர்ந்தவர் மோகன் (35). இவர் தேமுதிக பிரமுகர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் விஷ்ணு (22), அவரது தம்பி குஞ்சன் (20) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மோகன் தனது வீட்டு வேலைக்காக தனது வீட்டு அருகே உள்ள பாதையில் பாறைப்பொடி இறக்கி போட்டிருந்தார். நேற்று (6-ம் தேதி) மாலை பாறை பொடியை எடுத்து வீட்டு வளாகத்திற்குள் கொண்டு செல்லும் போது ஏற்பட்ட பிரச்சனையில் விஷ்ணு, குஞ்சன் ஆகியோர் சேர்ந்து மோகனை தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக அவர் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.