நாளை முதல் அனைத்து சாம்சங் நிறுவன ஊழியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், "போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் ஒரு தரப்பினர் உடன்பாட்டுக்கு வந்து கையெழுத்திட்டுள்ளனர். மற்றொரு தரப்பினர் போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்துள்ளனர். அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் அரசின் கோரிக்கை" என்று தெரிவித்துள்ளார்.