விளவங்கோடு - Vilavengodu

குமரி: நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களில் செம்மண் கடத்தல்

குமரி: நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களில் செம்மண் கடத்தல்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட  காஞ்சிரக்கோடு பகுதியில் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி என்று கூறி செம்மண் கொண்டு செல்ல கனிமவளத்துறையிடம் இருந்து 10 நாட்களில் சுமார் 150 லோடு செம்மண் சிறிய ஒரு யூனிட் அளவுள்ள டெம்போக்களில் கொண்டு செல்ல அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது.   ஆனால் இரண்டு நாட்களிலேயே சுமார் 1500 லோடு செம்மண் பெரிய டெம்போக்களில் கடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. சுமார் 50 சென்று நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக, அனுமதி பெற்றதற்கும் கூடுதலாக அதிக அளவில் செம்மண் கடத்தல் தொடர்ந்து நடந்து வருவது அதிகாரிகளின் உடந்தையோடு தான் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அந்த கனிமவளம் கடத்தும் வாகனங்களில் பதிவு எண்கள் கூட முறையாக இல்லை என்பதும் பல பெரிய டெம்போக்களில் பின்புறம் வாகன பதிவு எண் கூட கழட்டி வைத்துவிட்டு செம்மண் கடத்தலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிற்று.   அதை நிரூபிக்கும் விதமாக வாகனத்தில் பின்புறம் பதிவெண் இல்லாத வாகனத்தில் கனிம வளம் கொண்டு செல்லும் புகைப்பட காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதோடு கனிம வள கடத்தலுக்கு உடனடியாக உள்ள அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా