மார்த்தாண்டம்: மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபருக்கு சிறை

55பார்த்தது
மார்த்தாண்டம்: மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபருக்கு சிறை
மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெனடிக்ட்  தலைமையிலான போலீசார் மார்த்தாண்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

 அப்போது அவரிடம் சிறு சிறு பொட்டலங்களில் 250 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

      இதை அடுத்தவரை பிடித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் கன்னியாகுமரி அருகே  முருகன்குன்றம் பகுதியை சேர்ந்த டேவிட்மகன் ஜெப்ரின் (22) என்பதும் கஞ்சாவை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி