குழித்துறை: கோவில் இடிப்பதாக தகவல்;  பக்தர்கள் யாகம்

65பார்த்தது
குழித்துறை கோர்ட் சந்திப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தாலுகா அலுவலகம், சார் கருவூலம் போன்றவை அமைந்துள்ளது. இந்த சந்திப்பில் பழமையான ஆலமரத்தின் அடிவாரத்தில் புகழ்மிக்க அரக நாடு சாஸ்தா கோயிலுடன் தொடர்புடைய 120 ஆண்டு பழமையான தர்மசாஸ்தா கோயில் உள்ளது. இந்த கோயிலில் மக்கள் தினசரி வழிபடுகின்றனர். அத்துடன் கோர்ட்டுக்கு செல்லும் வழக்கறிஞர்கள் சிலர் வழிபடுவது உண்டு.
     இந்த ஆலயத்தை நேற்று நகராட்சி நிர்வாகம் இடிக்க போவதாக சமூக வலைத்தளங்களில்  செய்தி பரவியது. தகவல் அறிந்து இந்து முன்னணி மாவட்ட முன்னாள் தலைவர் செல்லன் , இந்து கோவில் கூட்டமைப்ப அமைப்பாளர் முருகன், குழித்துறை நகர இந்து முன்னணி தலைவர் வினோத்குமார் உள்ளிட்டோர் திரண்டு வந்து கோவிலில்  யாகம் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. இதனால் கோர்ட்டு சந்திப்பில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி