கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டம் இரவிபுத்தன்துறையில் நடந்தது. மத்திய கடல் மீன்வளம் ஆராய்ச்சி நிறுவனத்தின் கொச்சி தலைமை அதிகாரி முனைவர் ஷோபா தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்திற்கு குளச்சல் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அஜித் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். கிராமப்புற தொழில்நுட்ப வளர்ச்சி மையம் தலைவர் வின்சென்ட் ஜெயின் கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.
பின்னர் கருத்துரை வழங்கிய விழிஞ்சம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் சந்தோஷ், முனைவர் சூர்யா, ரம்யா, ஆய்வாளர் ஜெகன் போன்றவர்கள் குருத்தெலும்பு மீன்களின் வாழ்க்கை முறை மற்றும் அதன் இனப்பெருக்கம் போன்றவைகளையும் அதை பாதுகாக்கும் முறைகளையும் விளக்கிக் கூறினார்கள். இக்கூட்டத்திற்கு இரவிபுத்தன்துறை அருட்பணியாளர் ரெஜின் மற்றும் ஏராளமான மீனவர் பிரதிநிதிகளும் பெண்கள் அமைப்பினரும் கலந்துகொண்டனர்.