மார்த்தாண்டம்: மாணவ மாணவிகளின் சாலை விழிப்புணர்வு பேரணி

68பார்த்தது
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மார்த்தாண்டத்தில் நேற்று (ஜனவரி 31) வெட்டுவெந்நீர் ஓய்எம்சிஏ வளாகத்திலிருந்து மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையம் வரை கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

மாணவ மாணவிகள் கல்லூரி சீருடையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், வாகனங்கள் ஓட்டுவது, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இந்த பேரணியை தக்கலை டிஎஸ்பி பார்த்திபன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மார்த்தாண்டம் போக்குவரத்து கிளை கழக மேனேஜர் ஸ்டாலின், டிராபிக் இன்ஸ்பெக்டர் செல்லசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி