குழித்துறை: 2 கார்களில் 1139 லிட்டர் மண்ணெண்ணெய் பறி முதல்

83பார்த்தது
குமரி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கேரளாவுக்கு கடத்தி செல்வது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இனயம் பகுதியிலிருந்து கேரள மாநிலத்திற்கு இரண்டு கார்களில் மண்ணெண்ணெய் கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அந்த கார்களை போலீசார் துரத்தி சென்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை.

     இதையடுத்து கடத்தல் வாகனங்களை பிடிக்க களியக்காவிளை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் உட்பட பொதுமக்களின் உதவியை போலீசார் நாடினர். இதையடுத்து மண்ணெண்ணெய் கடத்திய வாகனத்தை சமூக ஆர்வலர்கள் சாலையின் நடுவே கார் மூலம் வழிமறுத்து கடத்திய காரை பிடித்தனர்.   இது தொடர்பாக மெதுகும்மல் பகுதியை சேர்ந்த கனகராஜ் (51), கேரள மாநிலம் கோவளம் பகுதியை சேர்ந்த சஜ்ஜீர் (41), விஷ்ணு (36) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் 1139 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி