கருங்கல்: கொத்தனார் உயிரை பறித்த சாலையில் ஏற்பட்ட பள்ளம்
கருங்கல் அருகே கப்பியறை பகுதியைசேர்ந்தவர் மரியமிக்கேல் (52) இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று (ஆக.,29) கருங்கலில் இருந்து திக்கணங்கோடு செல்வதற்காக தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். மத்திகோடு அருகே பாம்பூரி வாய்க்கால் பாலம் அருகே செல்லும்போது சாலை பள்ளத்தில் சிக்கி நிலை தடுமாறி அருகே நின்ற மின்கம்பத்தில் இவரது பைக் மோதியது. இதில் நிலை தடுமாறிய அவர் அதே வேகத்தில் அவர் கால்வாயில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கருங்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் மரியமிக்கேல் உயிரிழந்தார். இதையடுத்து கருங்கல் போலீசார் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.