மார்த்தாண்டம்:    கடையில் பேட்டரிகள் திருடிய 3 பேர் கைது

63பார்த்தது
மார்த்தாண்டம் அருகே சிராயன் குழி பகுதியில் வின்சென்ட் ராஜ் என்பவர் பழைய வாகனங்களை வாங்கி பிரிக்கும் கடை நடத்தி வந்தார். சம்பவ தினம் இரவு நள்ளிரவில் கடையில் புகுந்த மர்ம நபர்கள் 51 பழைய பேட்டரிகளையும், வாகனங்களை பிரிக்க  பயன்படுத்தும்  கருவிகளையும்  திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வின்சென்ட் ராஜ் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

      போலீசார் வழக்கு பதிவு செய்து பேட்டரிகளை திருடிய ஆசாமிகளை தேடி வந்தனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சிஜு (34), சனல் (42), மோகன் குமார் (37) ஆகிய மூன்று பேர் பேட்டரிகளை திருடி காரில் கொண்டு சென்றது தெரியவந்தது.

       இதை அடுத்து அவர்கள் மூன்று பேரையும் மார்த்தாண்டம் போலீசார் நேற்று கைது செய்து 51 பழைய பேட்டரிகளையும் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி