திருவட்டார்: வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

56பார்த்தது
திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுருளக்கோடு, அயக்கோடு, அருவிக்கரை ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று (24.01.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, ஆய்வு மேற்கொண்டார். சுருளக்கோடு ஊராட்சிக்குட்பட்ட கூவக்காட்டுமலை குக்குகிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் 2024-2025 திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பில் கட்டிவரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அயக்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.4.54 கோடி மதிப்பில் மலவிளை அருகே பரளியாறு குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலப்பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5.60 கோடி மதிப்பில் மாத்தூர் தொட்டிபாலம் முதல் முதலாறு இணைப்புச்சாலை கட்டுமானப் பணிகள் பார்வையிடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கட்டுமானப் பணிகள் தரமானதாகவும், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நடைபெற்ற ஆய்வுகளில் ஊரகவளர்ச்சி செயற்பொறியாளர், உதவிச் செயற்பொறியாளர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.