விளவங்கோடு - Vilavengodu

மார்த்தாண்டம்: தம்பதியை தாக்கி மிரட்டல்.. உறவினர் மீது வழக்கு

மார்த்தாண்டம்: தம்பதியை தாக்கி மிரட்டல்.. உறவினர் மீது வழக்கு

மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி ராஜ் (45). இவரது மனைவி ஜெனிலா மேரி (40). இவர்களுக்கும் ஸ்டாலின் ராஜன் அண்ணன் மகன் ஷாஜி (32) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (6-ம் தேதி) ஜெனிலா மேரி சர்ச்சுக்கு செல்வதற்காக ஷாஜியின் வீட்டு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஷாஜி அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு ஜெனிலாவை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அவரது கணவர் ஸ்டான்லி ராஜ் வந்து தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாஜி, ஸ்டான்லி ராஜையும் தாக்கி காயம் ஏற்படுத்தியதோடு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இது குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலயத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் இன்று(அக்.7) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా