பெரியார்  பிறந்த நாள்:   கலெக்டர் சமூக நீதி உறுதிமொழி ஏற்பு

80பார்த்தது
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதியினை அரசு சார்பாக சமூக நீதி நாளாக கொண்டாடப்படுமென அறிவித்ததற்கிணங்க, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழியினை அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.  
     பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியை எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத்திறனும் பகுத்தறிவும் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்தும், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்கான என்னை ஒப்படைத்துக்கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன் என்று அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
     இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பாலசுப்பரமணியம்  உட்பட அனைத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி