புதுக்கடை போலீஸ் நிலையம் சார்பில் பைங்குளம் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளருக்கும் விழிப்புணர்வு முகாம் நேற்று (அக்.,5) நடைபெற்றது. பைங்குளம் முதல் நிலை ஊராட்சி தலைவர் விஜய ராணி தலைமை வகித்தார்.
புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜானகி , சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் பணியாளர்களிடம் தங்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் எனவும் செல்போன்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துவது குறித்தும், போதை பழக்கங்களிலிருந்து விடுபட்டு ஒழுக்கமுடன் வளர்ப்பது குறித்தும், உரிமம் இல்லாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்ட பிள்ளைகளை அனுமதிக்க கூடாது எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.