கன்னியாகுமரி மாவட்டம் ரூ. 222 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட மார்த்தாண்டம் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில் பம்மம் பகுதியில் ஏற்கனவே கடந்த மே மாதத்தில் மேம்பாலம் நடுப் பகுதியில் பள்ளம் ஏற்பட்டது.
தற்போது மீண்டும் அதே பகுதியில் சுமார் 50 அடி தொலைவில் மீண்டும் வட்ட வடிவில் பள்ளம் ஏற்பட்டு, உட்பகுதியில் உள்ள கம்பிகள் மேலே தெரிந்தது. மேலும் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தகடு உடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த தலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சேதப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதை தொடர்ந்து நேற்று சீரமைப்பு பணி தொடங்கியது. முதலில் மேம்பாலத்தில் பழுதடைந்த பகுதியில் உள்ள சிமெண்ட் கலவை தார் போன்றவற்றை அகற்றப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் உடனடியாக கான்கிரீட் போடப்படும் பணி உடனடியாக தொடங்கப்படும் என்று தெரிய வருகிறது.
பழுதடைந்த பகுதியில் கார், ஆட்டோ இருசக்கர வாகனங்கள் போன்றவை செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. சீரமைப்பு பணி தொடங்கப்பட்டதை தொடர்ந்து குழுத்துறையில் இருந்து மேம்பாலம் வழியாக வாகனங்கள் மார்த்தாண்டம் காந்தி மைதானம் வழியாக திருப்பி விடப்படுகிறது.