குளச்சல் - Kulachal

மணவாளக்குறிச்சி: மணல் ஆலையை விரிவு படுத்த சிஐடியு கடிதம்

மணவாளக்குறிச்சி: மணல் ஆலையை விரிவு படுத்த சிஐடியு கடிதம்

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இந்திய அரிய வகை மணல் ஆலை செயல்பட்டு வருகிறது.   இந்த ஆலையின் சிஐடியு ஊழியர் சங்க உதவித் தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் முரளிதரன் மற்றும் உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: -  மணவாளக்குறிச்சி மணலாலைக்கு  கடல் பகுதியில் இருந்து மணல் எடுக்கப்படும் போது, இயற்கையாகவே அப்பகுதிகளில் படிந்து கிடக்கும் கனிமங்களை மட்டுமே பிரித்து எடுக்கப்படும். இதனால் கதிர் இயக்கத்தின் அளவு 6 முதல் 10 மடங்கு குறைய வாய்ப்புள்ளது. கடற்கரை ஒழுங்காற்று சட்ட விதிகளின்படி மணல் எடுத்து, பின்னர்  நிரப்பி விடுவதால் கடல் அரிப்பு ஏற்படாது. மட்டுமின்றி இந்த நிறுவனத்தால் அதிக வேலை வாய்ப்பு உருவாகும். எனவே கடலோரப் பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்திடவும், ஆலையை விரிவாக்கம் செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என மனுவில் கூறப்பட்டுள்ளது.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా