தமிழக காங்கிரஸ் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 2- ம் தேதி தொடங்கி 9 - ம் தேதி வரை விழிப்புணர்வு நடை பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது.
மகாத்மா காந்தியடிகளின் 156 வது பிறந்தநாள், காமராஜர் 49 வது நினைவு நாள், லால்பகதூர் சாஸ்திரியின் 120வது பிறந்தநாள் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை முன்னிட்டு காந்திய சிந்தனை, அமைதி, மத நல்லிணக்கம், அகிம்சை, வெறுப்பு அரசியலுக்கு எதிரான பிரச்சாரம், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான பொய் மற்றும் அவதூறு பிரச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் விளங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் முதல் மேல்புறம் முதல் குழித்துறை வரை இன்று (6-ம் தேதி) மாலை காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரை நடைபெற்றது.
மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை வகித்தார். மேல்புறம் சந்திப்பில் தொடங்கிய இந்த பாதயாத்திரை கழுவன்திட்டை, நீதிமன்ற வளாகம் வழியாக குழித்துறை சந்திப்பு பகுதி வந்தடைந்தது. அங்கு விளக்க கூட்டம் நடை பெற்றது. இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.