குமரி - கேரளா எல்லை பகுதி செறுவாரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் ஜேக்கப் பி ஐசக் (86). இவருக்கு தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் ரப்பர் தோட்டம் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி காலையில் இவருடைய தோட்டத்தில் உள்ள ரப்பர் மரங்களை வெட்டி லாரியில் கடத்த கடத்துவதாக டாக்டருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அவர் காரில் புறப்பட்டு சம்பவ இடம் வந்து கேட்டபோது தோட்டத்து உரிமையாளர் ஜெயசிங் என்பவர் கூறியதால் வெட்டியதாக தொழிலாளர்கள் கூறியுள்ளனர். உடனடியாக டாக்டர் ஜேக்கப் தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடை அங்கு வந்த தோட்டத்து உரிமையாளர் என கூறிய ஜெய்சிங்கை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அதே சமயத்தில் ரப்பர் மரத்தை வெட்டியதில் நட்டாலம் பகுதியை சேர்ந்த புகைப்பட கலைஞரான டிசேயர் சுந்தர் சேம் (33) என்பவர் ரப்பர் மரத்திற்கான பணம் ரூபாய் 6 லட்சத்து 70 ஆயிரத்தை அவருடைய வங்கி கணக்கில் வாங்கியது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் கடந்த ஏழு மாதமாக தலைமறைவாக இருந்த அவரை நேற்று 5ஆம் தேதி நட்டாலத்தில் வைத்து தக்கலை போலீசார் கைது செய்தனர்.