கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (24-ம் தேதி) நடைப்பெற்றது. ராமன்புதூரில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை துணை கண்காணிப்பாளர் மதியழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு போஸ்கோ குறித்த விழிப்புணர்வு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினர். ஏராளம் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.