நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனி 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆஷா புஷ்ரா. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருமணம் ஆக வில்லை. கடந்த 22ம் தேதி விஷம் குடித்தார். இதையடுத்து அவர் குமரி அரசு மருத்து கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து நேசமணி நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே திருமணம் செய்வதாக வாலிபர் ஒருவர் ஏமாற்றியதாகவும், ஏற்கனவே இது தொடர்பாக வடசேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் கூறப்ப டுகிறது. இது தொடர்பாக ஆஷா புஸ்ராவின் உறவினர் அபுல் பயாத் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தார்.
இந்த நிலையில் ஆஷா புஸ்ரா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் போலீசாரிடம் சிக்கி உள்ளது.
அந்த கடிதத்தில் என்னுடைய சாவிற்கு தனியார் நிறுவன உரிமையாளரும் அவரது நண்பர் மற்றும் போலீசார் காரணமென எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆஷா புஷ்ரா விஷம் குடித்த பிறகு வாக்குமூலம் அளித்துள்ள வீடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருவதால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.