வாகனத்தை குறைவாக ஓட்டினால், இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டிய அவசியமில்லை என பலர் நினைக்கின்றனர். ஆனால், அந்த கருத்து முற்றிலும் தவறானது. உங்கள் பைக்கை ஆண்டு முழுவதும் இயக்கப்படாமல் இருந்தாலும் சரியான நேரத்தில் என்ஜின் ஆயிலை மாற்றுவது முக்கியம். அதன்படி, ஒவ்வொரு 2,000 முதல் 3,000 மைல்களுக்கு ஒருமுறை உங்கள் பைக்கில் என்ஜின் ஆயிலை மாற்றுவது நல்லது. இது உங்கள் வாகனத்தின் செயல்திறன் மற்றும் இன்ஜினின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.