திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியும் திருவட்டார் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டியும் இணைந்து திருவட்டார் புதிய பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வலியுறுத்தி மாபெரும் கை எழுத்து இயக்கம் திருவட்டார் பேருந்து நிலையத்தின் முன்பு இன்று (5-ம் தேதி) நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கிங்ஸ்லி தாமஸ் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் வக்கீல் D. ஜெபா(கிழக்கு), T. வினுட்ராய்(மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவட்டார் பஞ்சாயத்து கமிட்டி தலைவர் சேம் மார்டின் வரவேற்புரையாற்றினார். கை எழுத்து இயக்கத்தை தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் வக்கீல் S. ராஜேஷ்குமார் M. L. A துவக்கி வைத்தார்.
மற்றும் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மருத்துவர் பினுலால்சிங், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரெத்தினகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.