அமெரிக்காவைச் சேர்ந்த 'நியூ இங்கிலாந்து' என்கிற மருத்துவ இதழ் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. 30 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் தினமும் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ்களை சாப்பிடுவதால் ஆயுள் அதிகமாகும் எனவும், நட்ஸ்களை சாப்பிடுபவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் உடல் நலனில் அதிக அக்கறையுடன் இருப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.