மார்த்தாண்டம்: மேம்பாலத்தில் அருவியாய் கொட்டும் மழை தண்ணீர்

69பார்த்தது
மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடிகளை குறைக்கும் வகையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலம் அமைக்கப்பட்ட பின்பு முறையாக பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து தற்போது மேம்பாலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு மேம்பாலம் வழியாக வாகனங்கள் இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
       இதற்கிடையில் தற்போது குமரி மாவட்டத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பாலத்தின் பல பகுதிகளிலும் மழை நீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட குழாய்கள் உடைந்து விழுந்ததால் மழை நீர் அருவி போல் கீழே  கொட்டி  வருகிறது. மட்டுமின்றி பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள சாலைகள் முறையாக சீரமைக்கப்படாதால் குண்டும் குழியுமாகியுள்ளதால்,   இந்த மழை நீர் சாலையில்  தேங்கி பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.  

    நேற்று இரவு முதல் இன்று 7- ம் தேதி வரையிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. வாகனங்கள் இயக்க  பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி