குமரி மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் கருங்கலில் நேற்று ( 4-ம் தேதி) நடைபெற்றது. கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட திமுக செயலா் த. மனோதங்கராஜ் எம். எல். ஏ. தலைமை வகித்தாா். துணை செயலா்கள் பாபு, டேவிட் ராஜபோஸ், அப்புக்குட்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மேற்கு மாவட்ட அளவில் அனைத்து பகுதிகளிலும் திமுக செயல் வீரா்கள் கூட்டம் நடத்துவது, துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பது, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்திற்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதற்கு எதிராக பொதுமக்களிடம் பிரசாரம் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய செயலா்கள் கோபால்(கிள்ளியூா் தெற்கு), டி. பி ராஜன் (கிள்ளியூா் வடக்கு), ஜான்சன் (திருவட்டாறு), மோகன்(முன்சிறை), சைனி காா்ட்டன்(மேல்புறம்) குழித்துறை நகர செயலா் வினுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.