காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொளப்பாக்கம் ஊராட்சியில் குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏசுபாதம் ஏற்பாட்டில் மற்றும் அய்யப்பன்தாங்கல் பகுதியில் மாணவரணி மாவட்ட செயலாளர் பூபதி ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்புவிழா இன்று (ஏப்ரல். 1 செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.
இதில் சென்னை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சோழிங்கநல்லூர் எம்எல்ஏவுமான கே. பி. கந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர்மோர், கம்மங்கூழ், தர்பூசணி, முலாம்பழம், இளநீர், நுங்கு, வெள்ளரி, மண்பானை போன்றவை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மாலதி ஏசுபாதம், நிர்வாகிகள் ராஜசேகர், பரணி பிரசாத், தேன்ராஜா, வரதராஜன், லோகேஷ் (எ) லட்சுமிகாந்தன், தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.