நவம்பரில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யும்
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 123% அதிம் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நவம்பர் 5ஆம் தேதி புதிய காற்றத்தழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை மைய தலைவர் மொஹபத்ரா தெரிவித்துள்ளார். எனவே இம்மாதத்தின் இரண்டாவது வாரம் முதல் கடுமையான மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.