ஸ்பெயினில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. வலென்சியாவில், செவ்வாய் இரவு முதல் புதன்கிழமை வரை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 155 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். Andalusia மற்றும் Castile-La Mancha பகுதிகளில் மேலும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. 2 சுரங்கப்பாதைகள் இடிந்து தண்டவாளங்கள் சேதமடைந்ததால், வெலன்சியா, மாட்ரிட் இடையேயான அதிவேக ரயில் சேவை தடைபட்டுள்ளது.