வைட்டமின் டி சப்ளிமெண்ட்டை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எடுத்தால் உடலில் கால்சியம் அளவு அதிகரிக்கலாம். இதனால் எலும்பு வலி, தமனிகள் அல்லது மென்மையான திசுக்களில் கால்சியம் படிவது, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதிக வைட்டமின் டி எடுத்துக் கொள்வது நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். குமட்டல், வாந்தி, தசை பலகீனம், சிறுநீரக கற்கள், சிறுநீரக செயலிழப்பு, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.