புறா எச்சங்கள் ஏன் இவ்வளவு ஆபத்தானவை?
புறாக்களின் எச்சங்கள் மற்றும் சிறகுகள் மூலம் கிரிப்டோகாக்கி போன்ற பல்வேறு நோய்க்கிருமிகள், பூஞ்சை செல்கள் உருவாகிறது. இந்த செல்களை உள்ளிழுப்பதால் மனிதர்களுக்கு ஆஸ்துமா, நிமோனிடிஸ், பூஞ்சை தொற்றுடன் கடுமையான சுவாச பிரச்சனைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நோய் தீவிரமடைந்தால் மரணம் கூட ஏற்படலாம். எனவே புறாக்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.