ஜூலை 18-ஆ, நவம்பர் 1-ஆ தமிழ்நாடு நாள் எது? ஏன் இந்த குழப்பம்?
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1 தமிழ்நாடு நாளாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2022-ல் திமுக அரசு இந்த தினத்தை மாற்றியது. மெட்ராஸ் மாகாணம் என இருந்ததை ஜூலை 18, 1968 அன்று அண்ணா ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றினார். எனவே மாநிலமாக பிரிக்கப்பட்ட நாளை விட, பெயர் மாற்றம் பெற்ற நாளே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என திமுக முடிவெடுத்தது. ஆனால் பலரும் நவம்பர் 1 தான் ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாடி வருகின்றனர்.