கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூரில் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகள் வெடித்து இளைஞர் உயிரிழந்தார். எறையூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான டேவிட் வில்சன் என்ற இளைஞர், தனது இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை கொண்டு சென்றுள்ளார். அப்போது, வேறு எங்கே வெடித்த பட்டாசு பறந்து வந்து விழுந்ததில், வாகனத்தில் இருந்த பட்டாசு மீது பற்றி வெடித்தது. இந்த கோர விபத்தில் டேவிட் வில்சன் இறந்த நிலையில் இருவர் காயமடைந்தனர்.