கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றுப்பாலம் அருகே துாக்கில் தொங்கிய நிலையில் வடமாநில தொழிலாளி இறந்து கிடந்தார்.
கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் உள்ள கோமுகி ஆற்றுப்பாலம் அருகே மரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், ஒரிசா மாநிலம், தார்கேராவை சேர்ந்த துர்கா லக்காரா, 55; கூலித்தொழிலாளி. என்பதும், கோமுகி ஆற்று பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததும் தெரிந்தது.
அதே பகுதியில் தகர ஷீட் கொட்டகை அமைத்து தங்கியிருந்த துர்கா லக்காரா, கடந்த சில தினங்களாக உடல் வலியால் அவதியடைந்து வந்ததாக தெரிந்தது. தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.