அஜீரணமா? தீபாவளி மருந்து செய்து சாப்பிடுங்கள்
தனியா, மிளகு, சீரகம், ஓமத்தை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் இஞ்சி சேர்த்து வதக்கி அரைத்துக் கொள்ளுங்கள். மறுபுறம் வெல்லப்பாகு காய்ச்சி, அரைத்து வைத்த கலவையை இதனுடன் சேர்த்து கைவிடாமல் கிளறுங்கள். நன்கு கலந்ததும் நல்லெண்ணெய் விட்டு அடுப்பை அணைத்து விடவும். இதை காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் தீபாவளி அன்று சாப்பிட்ட எண்ணெய் பலகாரங்கள், ஸ்வீட்டுகளால் ஏற்பட்ட அஜீரணக் கோளாறுகள், வயிற்று மந்தம் காணாமல் போகும்.