திருக்கோவிலூர் - Tirukoilur

பஞ். , தலைவர், கவுன்சிலர் மோதல்: போலீசார் விசாரணை

அரகண்டநல்லூர் அடுத்த வெள்ளம்புத்தூர் கிராமத்தில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் களுக்கிடையே நடந்த மோதல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முகையூர் ஒன்றியம், வெள்ளம்புத்தூர் ஊராட்சி யின் தலைவராக இருப்பவர் சரவணன், 35; இவருக்கும், 1வது வார்டு உறுப்பினர் அஞ்சுகம், 48; இடையே பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இச்சூழலில் அஞ்சுகத்தின் கணவர் வீராசாமி, 52; டேங்க் ஆபரேட்டராக உள்ளார். இவர் சரிவர குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அப்பணிக்கு அதே ஊரைச் சேர்ந்த காசிவேல் என்பவரை ஊராட்சி தலைவர் நியமித்துள்ளார். இதன் காரணமாக ஊராட்சி தலைவருக்கும், அஞ்சுகத்திற்கும் இடையே மோதல் நிலவி வந்துள்ளது. நேற்று காலை ஊராட்சி தலைவர் சரவணன், அவரது மனைவி கவிதா, 35; தாய் விஜயலட்சுமி ஆகியோர் அஞ்சுகத்தின் வீட்டிற்கு சென்று அவரை திட்டி, மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வேக மாக பரவத் துவங்கியது. தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

வீடியோஸ்

விழுப்புரம்
Sep 14, 2024, 03:09 IST/திருக்கோவிலூர்
திருக்கோவிலூர்

பஞ். , தலைவர், கவுன்சிலர் மோதல்: போலீசார் விசாரணை

Sep 14, 2024, 03:09 IST