தொழிலில் நஷ்டம்: விஷம் குடித்த தொழிலதிபர்
திண்டிவனம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மகன் சுரேஷ் (49). ஆட்டோ வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவருக்கு, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், சுரேஷ் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.