மரக்காணம் சுற்றுவட்டார பகுதியில் பொங்கல் விற்பனை மந்தம்

84பார்த்தது
அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, புதுப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டு, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொருட்களை இறைவனுக்கு படைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம்.

பொங்கல் திருநாள் நாளை (ஜன. 14) கொண்டாடப்படவுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கரும்பு மற்றும் மஞ்சள் விற்பனை சற்று மந்தமாகவே காணப்பட்டன. கடைகள் அனைத்தும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி இருந்தன, ஆங்காங்கே கடைகளில் ஒரு சில நபர்கள் மட்டும் ஆர்வமுடன் பொங்கல் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர். கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவு இல்லாததால் 10 கரும்பு 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது, அதேபோல் மஞ்சள் ஒரு கொத்து 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கரும்பு மற்றும் மஞ்சள் விற்பனையை போலவே மண்பாண்டம் விற்பனையும் மந்தமாக இருந்தன.

தொடர்புடைய செய்தி