நாடு முழுவதும் பல இடங்களில் ஜியோ நெட்வொர்க் முடங்கியுள்ளது. இதனால், பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல இடங்களில் இணைய வசதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக, ஜியோ பயனர்கள் எக்ஸ் தளத்தில் #Jiodown என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி குறைகளை தெரிவித்து வருகின்றனர். ஜியோ நெட்வொர்க் கோளாறு தொடர்பாக 10 ஆயிரத்து 367 புகார்களைப் பெற்றுள்ளது. மொபைல் இணையம் மற்றும் ஜியோ ஃபைபர் குறித்தும் ஜியோவுக்கு புகார்கள் வந்தன.